கண்டமனூரில்சாலையில் கிடந்த 2 மாத சிசு
கண்டனூரில் சாலையில் 2 மாத சிசு கிடந்தது.
தேனி
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு பிரிவு அருகே சாலையில் 2 மாத சிசு கிடந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கண்டமனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சாலையில் கிடந்த சிசுவை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிசு ஆணா? பெண்ணா? என்பது தெரியவில்லை. மேலும் இந்த சிசுவை சாலையில் வீசி சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் 2 மாத கரு இறந்த நிலையில் கிடந்த சம்பவம் கண்டமனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story