கந்தபுரத்தில் புதிய பயணியர் நிழற்குடை திறப்பு
கந்தபுரத்தில் புதிய பயணியர் நிழற்குடை யை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி கந்தபுரத்தில் ரூ.11லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவிற்கு யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் பாலசரஸ்வதி, துணைத்தலைவர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார். இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் சிவராமலிங்கம், உடன்குடி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் அஸாப் அலி பாதுஷா, செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.