கரூரில், 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா


கரூரில், 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா
x

75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நடந்தது.

கரூர்

கரூர் பாரத ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகம் சார்பில் கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

பின்னர் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரமேஷ் பேசுகையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் ஸ்டேட் வங்கி சிறந்து விளங்குகிறது. பொதுமக்களுக்கு வங்கி கொடுக்கும் கடன், அதன் வாடிக்கையாளர்கள் வங்கியில் செலுத்தும் பணமாகும். அதனால் கடன் வாங்குபவர்கள் முறையாக கடனை திரும்ப செலுத்த வேண்டும். வங்கிகள் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும், என்றார். இதையடுத்து சிறந்த வங்கி மேலாளருக்கும், வாடிக்கையாளர் சேவை மைய முகவர்களுக்கும் கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் கல்விக்கடன், முத்ராலோன், சிறு, குறு விவசாய கடன் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் காப்பீடு, தொழில் முனைவோருக்கான கடன், கல்வி கடன், தாட்கோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பான அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

இதில், சென்னை தலைமை அலுவலக துணை பொது மேலாளர் சன்சீவ் குமார், மண்டல மேலாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை மேலாளர் முத்தழகன் நன்றி கூறினார்.


Next Story