காயல்பட்டினம் நகராட்சியில்சொத்து வரி செலுத்தாத 30 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


காயல்பட்டினம் நகராட்சியில்சொத்து வரி செலுத்தாத 30 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x

காயல்பட்டினம் நகராட்சியில் சொத்து வரி செலுத்தாத 30 வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் நகராட்சியில் சொத்துவரி உள்ளிட்ட வரிகள் செலுத்தாத 30 வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நகராட்சிக்கு வரிபாக்கி

காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் சொத்து வரி, குடிநீர் இணைப்பு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை ஏராளமானோர் செலுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வகையில் நகராட்சி நிர்வாகத்திற்கு பல லட்சம் ரூபாய் வரை பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வரி பாக்கியை வசூலிக்க ஆணையாளர் குமார் சிங் நடவடிக்கை எடுத்துள்ளார். முதல்கட்டமாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், மற்றும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் பாக்கி இருப்பவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

ஆனாலும் வரி பாக்கி வசூலாகதநிலையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவரது உத்தரவின் பேரில், கடந்த சில நாட்களாக காயல்பட்டினம் பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக வரி பாக்கி வைத்துள்ள 32 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை நகராட்சி அலுவலர்கள் துண்டித்துள்ளனர்.

ஆணையாளர் எச்சரிக்கை

இனியும் தாமதிக்காமல் வரி பாக்கியை சம்மந்தப்பட்டவர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டும். இல்லையேல் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆணையாளர் எச்சரித்துள்ளார்.


Next Story