காயல்பட்டினத்தில் தீயில் கருகிய இளம்பெண் சாவு


காயல்பட்டினத்தில் தீயில் கருகிய இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 5:38 PM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் தீயில் கருகிய இளம்பெண் இறந்து போனார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

இடியாப்ப மாவு

காயல்பட்டினம் கோமான் புதூர் தெருவை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி பார்வதி. இவர் வீட்டில் இடியாப்பம் செய்து விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்தமகளுக்கு திருமணமாகி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். கர்ப்பிணியான அவர் தற்போது தலை பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

இவரது 2-வது மகள் பிரபா படித்துவிட்டு வீட்டில் தாய்க்கு உதவியாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி பார்வதி இடியாப்பம் வியாபாரத்திற்காக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் இருந்த பிரபா இடியாப்ப மாவை அடுப்பில் வைத்து வறுத்து கொண்டு இருந்துள்ளார்.

தீயில் கருகினார்

அப்போது எதிர்பாராமல் அவரது நைட்டியில் தீப்பிடித்து உள்ளது. சிறிது நேரத்தில் தீ அவரது உடலிலும் பற்றி எரிந்துள்ளது. அவரது அலறல் சத்தம்கேட்டு, அக்காள் மற்றும் உறவினர்கள் தீயை அணைத்து பலத்த காயங்களுடன் பிரபாவை மீட்டனர். உடனடியாக அவரை திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story