கயத்தாறில்இளம்பெண் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தற்கொலை


கயத்தாறில்இளம்பெண் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தற்கொலை
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் இளம்பெண் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறில் கணவர் இறந்த நிலையில் கூலி வேலையில் கிடைத்த வருமானமும் குடும்பம் நடத்த போதிய அளவு இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் துப்பட்டாவால் தன்னைத்தானே கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் சாவு

கயத்தாறு வாத்தியார் கிணற்று தெருவை சேர்ந்தவர் அந்தோணி. தொழிலாளி. இவரது மனைவி பிரவீனா (வயது 28). இவர்களுக்கு சுவீனா(12) என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தோணி இறந்து விட்டார். இதை தொடர்ந்து பிரவீனா தனது மகளுடன் மாமியார் வீடு அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

பிரவீனா கூலி வேலைக்கு சென்று வந்தார். சுவீனா அங்குள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். கூலி வேலைக்கு சென்று கிடைத்த வருமானம் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லாததால் பிரவீனா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். மேலும், சில நாட்களாக அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

துப்பட்டாவால் இறுக்கி...

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் துப்பட்டாவால் தன்னைத்தானே கழுத்தை இறுக்கி கொண்டு மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108ஆம்புலன் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணி தீலீப், நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

போலீசார் விசாரணை

மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், தனக்கு ஆதரவாக இருந்த தாயும் இறந்ததால் மகள் சுவீனா கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.


Next Story