கயத்தாறில்முன்னாள் ராணுவ வீரர் சங்க கட்டிடம்:கலெக்டர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்
கயத்தாறில் முன்னாள் ராணுவ வீரர் சங்க கட்டிடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்.
கயத்தாறு:
கயத்தாறில் முன்னாள் ராணுவவீரர் சங்க கட்டிடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்.
கயத்தாறு
கயத்தாறில் முன்னாள் ராணுவ வீரர்கள் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை குத்துவிளக்கு ஏற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர்சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.சின்னப்பாண்டியன், சங்க செயலாளர் நிறைபாண்டிசாமி பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மரக்கன்று நட்டினார். கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் தினம்
இதேபோன்று கோவில்பட்டி கடலையூர் ரோடு சமுதாய நல கூட்டத்தில் உலகின் ஒளி பார்வையற்றோர் அறக்கட்டளை சார்பில்
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் லூயிபிரைலி பிறந்தநாள் விழாவை யொட்டி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் லூ. மரியதாஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பி. எஸ். பிரசன்னா, ராமமூர்த்தி, கருப்பையா முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
வாழ்வாதாரம்
அவர் பேசுகையில், பார்வையற்றவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கடினமாக இருக்கிறது. அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டு மென்றால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் அவர்கள் குடியிருக்கும் வீடும், பணி புரியும் இடமும் ஒரே இடத்தில் இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும். அனைவருக்கும் ஒரே இடத்தில் பட்டா வழங்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அருகிலேயே 20 சென்ட் நிலத்தில் சமுதாயக் கூடம் அமைத்து கடலை மிட்டாய், தீப்பெட்டி மற்றும் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழில்கள் அமைத்து, வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரப்படும். இத்திட்டம் அடுத்த 6 மாதத்தில் செயலுக்கு வந்துவிடும்.
கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி தரப்படும். சிறு- குறு தொழில்கள் துறை மூலம், சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கான அரசாணையும் வெளியிடப் பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனை பட்டாவில், வருகிற ஆகஸ்ட் மாதத்திற் குள் வீடுகள் கட்டித் தரப்படும். இத்திட்டம் மற்ற மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒரு முன்மாதிரி திட்டமாக அமையும், என்றார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலர் சிவசங்கரன், தாசில்தார் சுசீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை நிர்வாகி இன்பராஜ் நன்றி கூறினார்.