கயத்தாறில் கண்டி கதிர்காமமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்
கயத்தாறில் கண்டி கதிர்காமமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறில் கடம்பூர் ரோட்டிலுள்ள கண்டி கதிர்காமமூர்த்தி கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு புண்யாவாசனம், கணபதி பூஜை, சங்கல்பம், யாகசாலை பூஜைகள், பூர்ணஹூதி நடைபெற்றது. காலை 9.20மணிக்கு கும்ப கடம் புறப்பட்டு கோபுரம் மற்றும் கண்டி கதிர்காமமூர்த்தி, கதிர்வேலனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10மணிக்கு மூலவருக்கு மஞ்சள் பொடி, திரவியம், பால், தேன், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது, பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, பூமாதேவி மற்றும் முருகனுக்கு பூஜைகளை செய்தார். இந்த கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story