கயத்தாறில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா


கயத்தாறில்  புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா
x

கயத்தாறில் புதிதாக அமையவுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா அடிகல் நாட்டு விழா நடந்தது. இவ்விழாவிற்கு மெடிசித்தா நிர்வாக இயக்குனர் சுந்தர்அழகுராஜ் தலைமை தாங்கினார். விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அந்த பூங்கா வளாகத்தில் எம்.பி. மரக்கன்று நட்டினார். அமைச்சர் கீதாஜீவன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், கயத்தாறு மத்திய தி.மு.க. ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் சுப்புலட்சுமி, கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.சின்னப்பாண்டியன், கயத்தாறு நகர செயலாளர் சுரேஷ் கண்ணன், கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமிராஜதுரை, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி,தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக்குமார், மெடிசித்தா இயக்குனர் சு.ராஜ்குமார், பொதுமேலாளர் க.முருகன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கடம்பூரில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டிடம் கட்ட எம்.பி. அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்குள்ள பள்ளிகளில் 10,12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற ஆறு மாணவ, மாணவிகளுக்கு எம்.பி. சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.


Next Story