கயத்தாறில்ரேஷன்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
கயத்தாறில் ரேஷன்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
கயத்தாறு:
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி அருகே உள்ள தோப்பு கோட்டையைச் சேர்ந்த அரங்குலவன் மகன் விஜய் (வயது 42). இவர் கயத்தாறு மதுரை மெயின் ரோட்டில் உள்ள அமுதம் சிறப்பு அங்காடியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு குடியிருந்து வந்த வாடகை வீட்டின் அருகில் உள்ள பாத்ரூமில் மின் ஒயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கயத்தாறு சப் இன்ஸ்பெக்டர் காசி லிங்கம் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும், அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story