கொம்மடிக்கோட்டை பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா


கொம்மடிக்கோட்டை பள்ளியில்  வானவில் மன்றம் தொடக்க விழா
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொம்மடிக்கோட்டை பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது.

தூத்துக்குடி

கொம்மடிக்கோட்டை:

கொம்மடிக்கோட்டை சு. சந்தோஷ நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பாக வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் தமிழாசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.. கொம்மடிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜபுனிதா தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தர்மேந்திரராஜ், பள்ளி பள்ளிமேலாண்மைக் குழு தலைவர் ஞானசெல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜாண்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவர்கள் எளிய அறிவியல் சோதனைகளைச் செய்து காட்டினர். மாணவர்கள் கணிதப்புதிர்களை செய்து காட்டினர். அறிவியல் கணித ஆசிரியர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஓவிய ஆசிரியர் அசோக்குமார் நன்றி கூறினார்.


Next Story