கூசாலிபட்டி கிராமத்தில்துணைசுகாதார நிலையம் திறப்பு


கூசாலிபட்டி கிராமத்தில்துணைசுகாதார நிலையம் திறப்பு
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூசாலிபட்டி கிராமத்தில் துணைசுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அடுத்துள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து கூசாலிபட்டி கிராமத்தில் ரூ.21 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கீழஈரால் வட்டார மருத்துவர் உமா செல்வி தலைமை தாங்கினார்.

துணை சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தனம் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் செவிலியர் சரணிகா, மேற்பார்வை யாளர்கள் கிருஷ்ணராம், கார்த்தி அஜய், பார்வதி, மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story