கோத்தகிரியில் குடிபோதையில் காரை ஓட்டியவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்


கோத்தகிரியில் குடிபோதையில் காரை ஓட்டியவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் குடிபோதையில் காரை ஓட்டியவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் நேற்று காமராஜர் சதுக்கத்தில் இருந்து டானிங்டன் நோக்கி அதிவேகமாக கார் ஒன்று சென்றது. அந்த கார் ஓட்டுனர் அவ்வழியாக கைக்குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது லேசாக மோதி விட்டு நிறுத்தாமல் சென்றார். இதில் அதிர்ஷ்டவசமாக குழந்தையும், தாயும் உயிர் தப்பினர். இதையடுத்து அவ்வழியாக வந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு காரை நிறுத்தாமல் சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இளைஞர்கள் சிலர் டானிங்டன் விநாயகர் கோவில் அருகே காரை மறித்து நிறுத்தினர். காரை ஓட்டிச் சென்றவர் குடி போதையில் இருந்ததால், அவரைப் பிடித்து வைத்த பொதுமக்கள் இது குறித்து கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாபுவிடம், குடி போதையில் காரை ஓட்டியவரை ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கோத்தகிரி அருகே உள்ள பாமுடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (வயது 44) என்பது தெரிய வந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


Next Story