கோவில்பட்டயில் பிரபல கொள்ளையன் கைது
கோவில்பட்டயில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ரூ.மூன்று லட்சம் ரூபாய் பறிமுமதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முகமது அலி மகன் ஜாகிர் உசேன் (வயது 34). இவர் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட மந்தித்தோப்பு மற்றும் சுபா நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் கொள்ளைசம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
இதே போல திருச்செந்தூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவன். நேற்று கோவில்பட்டி கிருஷ்ணாநகர் காட்டு பகுயில் பதுங்கி இருந்த ஜாகிர்உசேனை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி மற்றும் போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவனை கோவில்பட்டி மாஜிஸ்திரேட் எண். 2 கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தினார்கள். மாஜிஸ்திரேட் பி.பீட்டர், அவனை 15 நாள் காவலில் வைக்க உத்திரவிட்டார்.
இதனை தொடர்ந்து ஜாகீர் உசேன் கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.