கோவில்பட்டியில்45 விநாயகர் சிலைகள் ஊர்வலம
கோவில்பட்டியில் 45 விநாயகர் சிலைகள் ஊர்வலம நடந்தது.
கோவில்பட்டி, (மேற்கு):
கோவில்பட்டி இந்து முன்னணி நகரம், ஒன்றியம் சார்பில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி 45 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலைகளுக்கு தினமும் காலை, மாலையில் பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று மாலையில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில், மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு லட்சுமி மில் மேம்பாலம் முன்பு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலத்தை இந்து முன்னணி நகர தலைவர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தலைமையில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், முன்னிலையில் நெல்லை கோட்ட தலைவர் தங்க மனோகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க மெயின் ரோடு, புது ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு இரவு நிறைவடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி தேவானந்த், வனசுந்தர் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து விநாயகர் சிலைகளும் வேம்பார் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.