கோவில்பட்டியில் ஏ.ஐ.டி.யு.சி. அமைப்பு தின விழா


கோவில்பட்டியில்  ஏ.ஐ.டி.யு.சி. அமைப்பு தின விழா
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஏ.ஐ.டி.யு.சி. அமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி:

கோவில்பட்டியிலுள்ள தனியார் மகாலில் ஏ.ஐ.டி.யு.சி.யின் 103-வது அமைப்பு தின விழா நடந்தது. ஆட்டோ தொழிலாளர் சங்க அய்யப்பன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பி.கரும்பன் ஏ.ஐ.டி.யு.சி. கொடியேற்றினார். மாவட்ட பொது செயலாளர் லோகநாதன், மாவட்ட பொருளாளர் பாலசிங்கம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட உதவி செயலாளர்கள் ஜி.பாபு, வி.பாலமுருகன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சேது ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பேசினா்.


Next Story