கோவில்பட்டியில் போலி ரசீது அடித்து பணம் வசூல் செய்த 3 பேர் கைது


கோவில்பட்டியில்  போலி ரசீது அடித்து பணம்  வசூல் செய்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் போலி ரசீது அடித்து பணம் வசூல் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் குருபூஜை விழா என்ற பெயரில் சிலர் போலியாக ரசீது அச்சடித்து நன்கொடை வசூல் மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் குறிப்பிட்ட பகுதியில் போலி ரசீது மூலம் பணம் வசூலித்து கொண்டிருந்த நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி வெள்ளைப் பாண்டி (வயது39), மேலச்செவல் நாராயண கோபால் ( 33), தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியாபுரம் வீரமணி (39) ஆகிய 3 பேரையும் பிடித்தனர். இது தொடர்பாக கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து போலி ரசீது மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.7 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story