கோவில்பட்டியில்நீர்வரத்து ஓடை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில்நீர்வரத்து ஓடை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நீர்வரத்து ஓடை மீட்புக் குழுவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு மீட்புக்குழு செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், நகரச் செயலாளர் மகாராஜன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகரன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்லத்துரை, இரட்டைமலை சீனிவாசன் இயக்கத் தலைவர் செல்வ குமார், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் தாவீது ராஜா, ஏஐடியசி முனியசாமி, பகத்சிங் ரத்ததான கழக தலைவர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் மகாலட்சுமியை

சந்தித்து மனு கொடுத்தார்கள். அதில், கோவில்பட்டி பிரதான சாலையோரம் உள்ள நீர்வரத்து ஓடையின் மீதுள்ள ஆக்கிரப்புகளை அகற்றக்கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினார்கள். மேலும் மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

இந்நிலையில் தற்போது நீர் வரத்து ஓடையின் மீது பெரிய அளவில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து ஓடை மீதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டுமென நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதனை செயல்படுத்த வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story