கோவில்பட்டியில் இலவசவீட்டுமனைபட்டா நிலத்தை மீட்டுத்தரக் கோரி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் இலவசவீட்டுமனைபட்டா நிலத்தை மீட்டுத்தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஜெய்பீம் தொழிலாளர் நலச் சங்க தலைவர் செணபகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர் மங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல தனித்தாசில்தாரால் 1998- 99- ஆம் ஆண்டில் 502 பட்டியல்இன சாதியினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது அந்த வீட்டுமனை பட்டா இடம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட பட்டியல்இன சாதியினருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா நிலத்தை மீட்டு தர கோரி உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த கோரி நேற்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ் புலிகள் வடக்கு மாவட்ட செயலாளர் வீர பெருமாள், துணை தலைவர் பீமாராவ், இளம் புலிகள் மாவட்ட செயலாளர் தமிழரசு, ஆதித்தமிழர் கட்சி இளைஞர் அணி மாவட்ட தலைவர் காளிமுத்துஹமற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் உதவி கலெக்டர் மகாலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் உறுதி அளித்தார். இதன் பேரில் சுமார் 3 மணி நேரம் நடந்த போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலந்து கொண்டனர்.