கோவில்பட்டியில்தமிழ்நாடு ஆக்கி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு
கோவில்பட்டியில் வியாழக்கிழமை தமிழ்நாடு ஆக்கி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
தமிழ்நாடு ஆக்கி சங்கத் தலைவர் சேகர் ஜே.மனோகரன், செயலாளர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வருகிற பிப். 15-ந்தேதி தேசிய சீனியர் பெண்கள் ஆக்கி போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் விளையாடும் தமிழக அணிக்கு வீராங்கனைகள் தேர்வு கோவில்பட்டி கிருஷ்ணாநகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் நாளை(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வீராங்கனைகள், தங்களது ஆதார் மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், அந்தந்த மாவட்ட செயலாள ரிடம் அனுமதி பெற்று வரவேண்டும், என தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story