கோவில்பட்டயில்வந்தேபாரத் ரெயில் நின்று செல்ல வேண்டும்:கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோரிக்கை


தினத்தந்தி 12 Aug 2023 12:15 AM IST (Updated: 12 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டயில் வந்தேபாரத் ரெயில் நின்று செல்ல வேண்டும் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

சென்னை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர். என். சிங்கை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அதில், விரைவில் தொடங்க இருக்கும் ெசன்னை-நெல்லை வந்தேபாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும். பயணிகள் வசதிக்காக ரெயில் நிலையத்தில் மேற்கூரை, லிப்ட் வசதி செய்ய தரவேண்டும், என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி செலவில் மேம்படுத்த தேர்வு செய்ததற்கு எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.

மேலும், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆடி கொடை விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு வாடகை கார் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் நேற்று சிறப்பு வழிபாடுகள், அன்னதான நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி க்கு சங்கத் தலைவர் செல்லையா தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி விற்பனை செய்தார். அவரிடம் 100 தேசிய கொடியை பெற்றுக் கொண்ட கொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அவர் வழங்கினார். வீடுகளில் தேசிய கொடியை பறக்க விடும்படி அவர்களை கேட்டுக் கொண்டார்.


Next Story