கோவில்பட்டியில்காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்


கோவில்பட்டியில்காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2023 12:15 AM IST (Updated: 8 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை 8-வது வார்டு புதுகிராமம் வசந்தம் நகர் 1-வது தெரு பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி நேற்று பெண்கள் காலி குடங்களுடன் நகரசபை அலுவலகத்துக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் அப்பகுதியில் சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story