கோவில்பட்டி பகுதியில், சனிக்கிழமைமின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
கோவில்பட்டி பகுதியில், சனிக்கிழமை மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள ெசய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவில்பட்டி கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இன்று
(சனிக்கிழமை) 2-வது நாள் முகாம் நடக்கிறது. இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பகுதிகளுக்கு லாயல் மில் காலனி, கணேஷ் நகர், அத்தை கொண்டான் ரோடு சித்தி விநாயகர் கோவில், கடலையூர் ரோடு மற்றும் வள்ளுவர் நகர் பகுதிகள், அன்னை தெரசா நகர், பாரதி நகர். கிராம பகுதிகளில் செமப் புதூர், தெற்கு கழுகுமலை, ராமனூத்து, எட்டையாபுரம் நகர் பாரதி மணிமண்டபம், பீக்கிலிப்பட்டி, சிவஞானபுரம், தெற்கு இலந்தைக்குளம், இளவேலங்கால், பசுவந்தனை, எம். பொம்மையாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும், என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story