கோவில்பட்டி கருமாரியம்மன் கோவிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சி


கோவில்பட்டி கருமாரியம்மன் கோவிலில்   கொடிமரம் நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கருமாரியம்மன் கோவிலில் கொடிமரம் நடும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோவிலில் கொடி மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு கணபதி ஹோமம், விக்னேஸ்வரபூஜை, சண்முக ஜபம், யாகசாலை பூஜை, மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரசபை கவுன்சிலர் கவியரசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அப்பகுதி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story