கோவில்பட்டி கோட்டத்தில் காலாவதியான அஞ்சல் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க சலுகை


தினத்தந்தி 14 Jun 2023 6:45 PM GMT (Updated: 15 Jun 2023 5:02 AM GMT)

கோவில்பட்டி கோட்டத்தில் காலாவதியான அஞ்சல் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்ட தபால் கண்காணிப்பாளர் எஸ். சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய அஞ்சல் துறையின் மூலம் பொது மக்களுக்கு குறைந்த தவணை மற்றும் அதிக போனசுடன் கூடிய ஆயுள் காப்பீட்டு பாலிசி மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு பாலிசி சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு சூழல் காரணமாக பாலிசிகளை தொடங்கிய வாடிக்கையாளர்கள், தங்கள் தவணைத் தொகையை செலுத்த தவறி விடுவதால், அந்த பாலிசிகள் காலாவதியாகி விடுகிறது.

காலாவதியான பாலிசிகளை அபராததொகையுடன் தான் புதுப்பிக்க இயலும். அதிக கால இடைவெளியில் பாலிசிகள் காலாவதியாகி இருப்பின் அபராத தொகையையும் அதிகமாக செலுத்த நேரிடுகிறது.

தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீட்டு இயக்குனரகமானது ஜூன் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரையிலான

காலகட்டங்களில், காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகையில் 25 முதல் 35 சதவீதம் வரையும், அதிகபட்சம் ரூ. 2,500 முதல் ரூ 3,500 வரையும் விலக்கு அளிக்கும் சலுகையை அறிவித்துள்ளது. இது குறித்த மேலும் தகவல்களுக்கு 8300756201 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, கோவில்பட்டி கோட்டத்திலுள்ல வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Next Story