கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட மின்தடை ஒத்திவைப்பு


கோவில்பட்டி கோட்டத்தில்   சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட மின்தடை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட மின்தடை ஒத்திவைக்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மின்வாரிய கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சிட்கோ, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, எம்.துரைச்சாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாகவும், இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று டி.ஆர்.பி. தேர்வு இருப்பதாலும், பருவ மழை காரணமாகவும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கம் போல மின் வினியோகம் இருக்கும் என்று கோவில்பட்டி மின் வாரிய செயற்பொறியாளர் மு.சகர்பான் தெரிவித்துள்ளார்.


Next Story