கோவில்பட்டியில் நகராட்சியில்ரூ.2¼ கோடியில் குடிநீர் திட்ட பணிகள்


கோவில்பட்டியில் நகராட்சியில்ரூ.2¼ கோடியில் குடிநீர் திட்ட பணிகள்
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நகராட்சியில் ரூ.2¼ கோடியில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி நகராட்சி கவுன்சில் அவசரக் கூட்டம் நேற்று காலையில் நடந்தது. தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை தலைவர் ஆர். எஸ். ரமேஷ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து நகராட்சி தலைவர் பேசுகையில், வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி நிலையத்தில் நின்று செல்வது தொடர்பாக கனிமொழி எம்.பி. டெல்லியில் மத்திய ரெயில்வேதுறை மந்திரியிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிறைவடையும். நகரமைப்பு அலுவலர்களை கொண்டு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வகுப்பறை பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்குகள் பழுது குறித்து, இங்குள்ள நோட்டில் எழுதி வைக்க வேண்டும். அப்போது தான் பழுது நீக்கம் குறித்து அறிய முடியும், என்றார்.

கூட்டத்தில், குடிநீர் திட்ட பணிகளுக்காக ரூ.2 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரம், சிதம்பராபுரம் நகராட்சி உரக்கிடங்கில் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.18.80 லட்சம், நாய் அறுவை கூட கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.6½ லட்சம், ராமசாமிதாஸ் நகராட்சிபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்களுக்கான செலவின தொகை ரூ.10 லட்சம் அனுமதி உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.


Next Story