கோவில்பட்டி கோவிலில் 108சங்காபிஷேக விழா


கோவில்பட்டி கோவிலில்  108சங்காபிஷேக விழா
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கோவிலில் 108சங்காபிஷேக விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழாவை யொட்டி காலை 11 மணிக்கு சங்கல்பம், கணபதி பூஜை, ஸ்பதன கும்பகலச பூஜை, 108 சங்கு பூஜை, சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், 108 சங்காபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story