கோவில்பட்டியில் வ.உ.சி. பிறந்த நாள் ஆலோசனை கூட்டம்


கோவில்பட்டியில் வ.உ.சி. பிறந்த நாள் ஆலோசனை கூட்டம்
x

கோவில்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பனார் 150- வது பிறந்த நாளை விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வ.உ.சி. சிதம்பரனார் பிறந்தநாள் விழாவிற்கு வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஓட்டப்பிடாரத் திலுள்ள அவரது இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் காந்தி என்ற காமாட்சி, அன்புராஜ், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார், பழனி குமார் மற்றும் நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.


Next Story