கோவில்பட்டியில் 1.25 லட்சம் தடை செய்யப்பட்ட பேப்பர் கப்புகள் பறிமுதல்


கோவில்பட்டியில்   1.25 லட்சம் தடை செய்யப்பட்ட   பேப்பர் கப்புகள் பறிமுதல்
x

கோவில்பட்டி லாரி செட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 1.25 லட்சம் தடை செய்யப்பட்ட பேப்பர் கப்புகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரி செட் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி லாரி செட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 1.25 லட்சம் தடை செய்யப்பட்ட பேப்பர் கப்புகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரி செட் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தடைசெய்யப்பட்ட பேப்பர் கப்புகள்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப்புகள் கோவில்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டபடுவதாக கோவில்பட்டி நகராட்சி ஆணையாளருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் காஜா நஜிமுதீன் தலைமையில் குழுவினர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள லாரி செட்டுகளில் சோதனை மேற்கொண்டனர்.

ரூ.75 ஆயிரம் மதிப்பு

அப்போது ஒரு லாரி செட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 1 லட்சத்து 25 ஆயிரம் எண்ணிக்கையிலான அரசால் தடை செய்யப்பட்ட, ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பேப்பர் கப்புகள், பெரிய அட்டை பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை மதுரையிலிருந்து கடத்தி வரப்பட்டு இப்பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் இதனை அனுப்பி வைத்தவரின் முகவரியும் இல்லை. பெறுநர் முகவரியில் முத்துக்குமார் கோவில்பட்டி என்று மட்டும் இருந்தது. இதையடுத்து அந்த பேப்பர் கப்புகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

உரிமையாளருக்கு அபராதம்

பறிமுதல் செய்யப்பட்ட பேப்பர் கப்புகளை நகராட்சி ஆணையாளர் ராஜாராம், சுகாதார அலுவலர் நாராயணன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் லாரி செட் உரிமையாளருக்கு நகராட்சி ஆணையாளர் ரூ.2ஆயிரம் அபராதம் விதித்தார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், ஒருமுறை பயன்படுத்தக் உள்ள கூடிய பேப்பர் கப்புகளை தமிழக அரசு தடை செய்துள்ளது. இந்த பேப்பர் கப்புகள் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் பொதுமக்களும், வியாபாரிகளும் தவிர்க்க வேண்டும். இதற்கு நகராட்சி எல்லைக்கு உட்பட்ட வணிகர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தடையை மீறி பேப்பர் கப்புகளை பயன்படுத்துவது தெரிய வந்தால் அவற்றை பறிமுதல் செய்வதோடு சம்மந்தப்பட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும், என்றார்.


Next Story