கோவில்பட்டிசொர்ணமலை கதிரேசன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்
கோவில்பட்டிசொர்ணமலை கதிரேசன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் 17 -ஆம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா மற்றும் லட்சார்ச்சனை விழா
நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடந்தது. காலை 10 மணிக்கு பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையையும் நடந்தது. மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்தனர்.
தொடர்ந்து 31-ந் தேதி வரை லட்சார்ச்சனை மற்றும் அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 31-ந்தேதி காலை 10 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு கார்த்திகேயர்- வள்ளி- தெய்வானை திருக்கல்யாணமும் நடை பெறுகிறது.
நவம்பர் 1-ந்தேதி மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலியும், இரவு 7.30 மணிக்கு சாந்தாபிஷேகம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் தி.சங்கர், நிர்வாக அதிகாரி கி. வெள்ளைச்சாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.