கூடலூர் நகராட்சியில் சிறந்த தன்னார்வலர்களுக்கு பரிசு
கூடலூர் நகராட்சியில் சிறந்த தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
தேனி
கூடலூர் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான திட்டத்தின் கீழ் தினந்தோறும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். ஆணையாளர் காஞ்சனா முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சக்திவேல், பொறியாளர் வரலட்சுமி, மேலாளர் ஜெயந்தி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அனைத்து வார்டுகளிலும் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களை பாராட்டும் விதமாக கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story