குலசேகரன்பட்டினத்தில் கிரிக்கெட் போட்டி


குலசேகரன்பட்டினத்தில்  கிரிக்கெட் போட்டி
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் ஹசனியா பவுன்சர்ஸ் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை 3 நாட்கள் நடத்தினர். இதில் 30 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதலிடம் பிடித்த தேரியூர் அணிக்கு ரூ.15ஆயிரம் பரிசு தொகையை பஞ்சாயத்து தலைவர் சொர்ணபிரியாதுரையும், 2-ம் இடம் பிடித்த ஹசானியா பவுன்சர் அணிக்கு ரூ.10ஆயிரம் பரிசு தொகையை தாண்டவன்காடு எஸ்.ஜி. டிரேடர்ஸ், 3-வது இடம் பிடித்த ஆர.்எஸ்.புரம் அணிக்கு ரூ.6ஆயிரம் பரிசு தொகையை ஜெயா மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக், 4-ம் இடம் பிடித்த ஹசானியா அணியினருக்கு ரூ.4 ஆயிரம் பரிசு தொகையை கிராமநிர்வாக அலுவலர் வைரமுத்து ஆகியோர் வழங்கினர். தொடர் நாயகன் விருதினை தேரியூர் சதீஷூக்கு ஹாஜி வழங்கினார். சிறந்த பேட்ஸ்மேனாக தேரியூர் ரவி, சிறந்த பவுலராக முகமது யூசுப், கவுதம், சிறந்த பீல்டராக சபீர், சிறந்த அணியாக விண்ணவரம் அணியினரும் பரிசுகளை பெற்றனர். முன்னதாக நடந்த கிரிக்கெட் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு ஹாஜா, 11-வது வார்டு கவுன்சிலர் முகமது அபுல்ஹசன் ஆகியோர் தலைமை தாங்கினர். பரிசளிப்பு விழாவில் 3-வது வார்டு உறுப்பினர் ராமலிங்கம் துரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.


Next Story