குலசேகரன்பட்டினத்தில்முத்தாரம்மன் சப்பர வீதி உலா


குலசேகரன்பட்டினத்தில்முத்தாரம்மன் சப்பர வீதி உலா
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சப்பர வீதி உலா நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பங்குனி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 8 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பரத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story