குலசேகரன்பட்டினத்தில் தொழிலாளியை தாக்கியவர் கைது


குலசேகரன்பட்டினத்தில் தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் வடக்கூர் பகுதியை சேர்ந்த சக்கரியான் மகன் பால்ராஜ் (42) மற்றும் திருச்செந்தூர் பரமன்குறிச்சி பகுதியை சேர்ந்த நடேசன் மகன் பட்டுராஜன் (45) ஆகிய 2 பேரும் உடன்குடி, குலசேகரன்பட்டினம் ரோடு பகுதியில் உள்ள ஒரு சிமெண்டு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 6-ந்தேதி பால்ராஜ் வேலை பார்க்கும் கடையின் முன்பு நின்று கொண்டிருந்தாராம். அங்கு மதுபோதையில் வந்த பட்டுராஜன், தகராறு செய்து பால்ராஜை சுத்தியலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்குப்பதிவு செய்து பட்டுராஜனை கைது செய்தார்.


Next Story