குலசேகரன்பட்டினத்தில்வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்


குலசேகரன்பட்டினத்தில்வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்்.15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக். 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வணிகர் சங்க பேரவை மாவட்டத் தலைவர் காமராஜர், செயலாளர் கண்ணன், மாவட்ட துணை பொருளாளர் செல்வின், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், கவுரவ ஆலோசகர் மகாலிங்கம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வணிகர்கள் முன்னேற்ற சங்க தலைவர் அம்புரோஸ், செயலாளர் சதீஷ், துணைத் தலைவர் பிரதீப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தசரா திருவிழாவில் வியாபாரிகள் வெளியில் இருந்து பொருட்களை வாங்கி ஊருக்குள் செல்வதற்கு அனுமதி பாஸ் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


Next Story