குலசேகரன்பட்டினத்தில்முத்தாரம்மன் சப்பரத்தில் வீதியுலா
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சப்பரத்தில் வீதியுலா நடந்தது.
தூத்துக்குடி
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாசிமாத கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பரத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story