குலேசகரன்பட்டினத்தில்காரில் கடத்திய 33 கிலோ ஆம்பர் கிரீஸ் பறிமுதல்
குலேசகரன்பட்டினத்தில் காரில் கடத்திய 33 கிலோ ஆம்பர் கிரீஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆறு பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் உடன்குடி- குலசேகரன்பட்டினம் சாலையில் நேற்று இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர்.
இதில் காரில் 33 கிலோ எடை கொண்ட திமிங்கலத்தின் உமிழ்நீரான ஆம்பர் கிரீஸ் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து ஆம்பர் கிரீசை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story