குமரியில்அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 44.4 மி.மீட்டர் மழை
குமரியில் அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 44.4 மி.மீட்டர் மழை
நாகர்கோவில்,
வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதியான பெருஞ்சாணி பகுதியில் 44.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதற்கு அடுத்தப்படியாக புத்தன் அணையில் 40 மில்லி மீட்டர் பதிவானது. அதேசமயம் குழித்துறையில் 8 மி.மீட்டரும், பேச்சிப்பாறையில் 1.3 மி.மீட்டரும், முள்ளங்கினாவிளையில் 12.4 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதேபோல நேற்று காலை பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 555 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 537 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 48 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. முக்கடல் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கனஅடி நீர் திறக்கப்பட்டன.