குரும்பூரில்320 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குரும்பூரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 320 கிலோ ரேஷன் அரிசி யை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் குரும்பூர் மற்றும் நாலுமாவடி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, நாலுமாவடி ரெயில் நிலையம் பகுதியில் 40 கிலோ எடை கொண்ட 8 மூட்டைகளில் மொத்தம் 320 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
உடனடியாக போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை பதுக்கியதாக கருங்குளம் மாதா கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story