பெருந்துறையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது


பெருந்துறையில்  சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
x

பெருந்துறையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்த இவரை காணவில்லை. இதுகுறித்து அவருடைய பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 26) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதில் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியை தினேஷ்குமாரிடம் இருந்து மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story