மதுரையில் தாறுமாறாக ஓடிய லாரி சுங்கச்சாவடியில் மோதியது; ஊழியர் பலி- 3 பேர் படுகாயம்


மதுரையில் தாறுமாறாக ஓடிய லாரி சுங்கச்சாவடியில் மோதியது; ஊழியர் பலி- 3 பேர் படுகாயம்
x

மதுரையில் தாறுமாறாக ஓடிய லாரி சுங்கச்சாவடியில் மோதியது. இதில் அங்குள்ள ஊழியர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை


மதுரையில் தாறுமாறாக ஓடிய லாரி சுங்கச்சாவடியில் மோதியது. இதில் அங்குள்ள ஊழியர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சுங்கச்சாவடி

மதுரை பாண்டிகோவில்-ரிங்ரோடு வண்டியூர் அருகே மஸ்தான்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகமான வாகனங்கள் சுங்கச்சாவடி வழியாக கடந்து சென்றன. இந்தநிலையில் ஆந்திராவில் இருந்து அரிசி மூடைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்தார்.

அந்த லாரி மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சுங்கச்சாவடியில் பணம் வசூல் செய்யும் மையத்தின் மீது பயங்கரமாக மோதியது. அப்போது அங்கு பணியில் இருந்த சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 37) என்பவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

3 பேர் படுகாயம்

மேலும் அந்த லாரி தறிக்கட்டு ஓடி, சுங்கச்சாவடியில் பணம் கட்டுவதற்காக எதிர்ப்புறத்தில் நின்ற ஆம்னி வேன் மீது மோதியது. இதில் அந்த வாகனத்தில் பயணித்த 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் லாரி டிரைவரும் படுகாயம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த சதீஷ்குமார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் லாரி, மதுரை ரிங் ரோடு சாலையில் வந்தபோது லாரியில் பிரேக் பிடிக்காமல் இருந்துள்ளதாகவும் அதனால் இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த சதீஷ்குமாரின் மனைவி நிறைமாத கா்ப்பிணியாக உள்ளார்.


Related Tags :
Next Story