மதுரையில், சாலையோரம் நிறுத்தி தூங்கினர் - டாக்டரின் காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கி, ரூ.2½ லட்சம் திருட்டு - போலீசார் விசாரணை


மதுரையில், சாலையோரம் நிறுத்தி தூங்கினர் - டாக்டரின் காரில் வைத்திருந்த  கைத்துப்பாக்கி, ரூ.2½ லட்சம் திருட்டு - போலீசார் விசாரணை
x

டாக்டரின் காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கி, ரூ.2½ லட்சம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை


டாக்டரின் காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கி, ரூ.2½ லட்சம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைத்துப்பாக்கி, பணம் திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம் அரசுவிளையை சேர்ந்தவர் பிளாட்பின் (வயது 44). பல் டாக்டரான இவர் கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் ஏரியா கமாண்டராகவும் உள்ளார். சம்பவத்தன்று இவர் பணி தொடர்பாக சென்னைக்கு தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் புறப்பட்டார். நள்ளிரவு மதுரை சிந்தாமணி சுங்கச்சாவடி அருகே வந்த போது, சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு அனைவரும் தூங்கி விட்டனர்.

அதிகாலை எழுந்து காரில் பொருட்கள் வைக்கும் பகுதியை பார்த்தபோது அது திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 3 பைகளை காணவில்லை. அதில் இருந்த 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி, செல்போன், 16 ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் பிளாட்பின், இதுகுறித்து கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அந்த துப்பாக்கிக்கு லைசன்சு உள்ளதும் தெரியவந்தது.

அந்த துப்பாக்கியை விைரந்து மீட்க போலீசாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்பேரில் திருடர்களை, தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story