மணப்பாடு மீனவ கிராமத்தில் தூண்டில் பாலம் ஆய்வு
மணப்பாடு மீனவ கிராமத்தில் தூண்டில் பாலம் ஆய்வு செய்யப்பட்டது.
குலசேகரன்பட்டினம்:
மணப்பாடு மீனவ கிராமத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் தூண்டில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கடலுக்குள் பாறாங்கற்கள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. இதனை தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் யூனியன் தலைவர் பாலசிங் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, பஞ்சாயத்து தலைவர் கிரேன்சிட்டாவினோ, மாவட்ட பிரதிநிதி மணப்பாடு ஜெயபிரகாஷ், யூனியன் கவுன்சிலர் லெபோரின், நாட்டு மீனவ சங்க தலைவர் கயஸ், ஊர்த்தலைவர் பியூஸ், தூயஆவி பங்கு கமிட்டி தலைவர் சந்திரா, வியாகப்பர் ஆலய கமிட்டி தலைவர் சிபூர்சியான், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் கல்லாசி மற்றும் ஊர்நல கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.