மாசார்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்


மாசார்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாசார்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

மாசார்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் செந்தில்ராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

மக்கள் தொடர்பு முகாம்

எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். முகாமில் சிறப்பு அழைப்பாளராக ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பேசினார். இம்முகாமில் வருவாய்த்துறை மூலம் பட்டா, உதவித்தொகை, ஆதிதிராவிட நலத்துறை மூலம் தையல் எந்திரம,் சுகாதாரத்துறை மூலம் மகளிருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மகளிர் திட்டம் மூலம் சுய உதவிக்குழு கடன் என 147 பயனாளிகளுக்கு ரூ.29.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும், கடந்த ஏப்.11-ந் நடந்த முன்னோடி முகாமில் பெறப்பட்ட 263 மனுக்களில் 188 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள 75 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முகாமில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாத்துரை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின்ராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாணயம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கீழஈரால்

மேலும், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கீழஈரால் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆ. நவநீத கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். ஜீ.வி. மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ., மாணவரணி எம். அக்ஸய் ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க அரசு நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களை விளக்கி பேசினர்.

அதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை கட்சி நிர்வாகிகளிடம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தலைமை கழக பேச்சாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இதேபோன்று விளாத்திகுளம் அருகில் உள்ள நாகலாபுரத்தில் தமிழக அரசின் சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.


Next Story