மயிலாடும்பாறையில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்


மயிலாடும்பாறையில்  பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடும்பாறையில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

மயிலாடும்பாறை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியில் பார்வையற்ற தம்பதியான ஜெயபால்-நிர்மலா உள்பட 4 பேர் வீடு கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நில உரிமையாளர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐகோர்ட்டு தீர்ப்பின்படி அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்போடு அகற்றும் பணிகள் நடந்தது.

அப்போது பார்வையற்ற தம்பதி உள்பட 4 பேரின் வீடும் இடித்து அகற்றப்பட்டது. தனியார் நில உரிமையாளர் கண்டித்து மயிலாடும்பாறை கிராம பொதுமக்கள் நேற்று முன்தினம் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பார்வையற்ற தம்பதிக்கு கிராம மக்கள் சார்பில் வீடு கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடு்த்து ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் மயிலாடும்பாறைக்கு வந்து வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரிடம் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை காட்டினர். பின்னர் எம்.எல்.ஏ. மயிலாடும்பாறை கிராம கமிட்டியினர் மற்றும் தனியார் நில உரிமையாளரை பேச்சுவார்த்தைக்காக ஆண்டிப்பட்டிக்கு அழைத்துச் சென்றார். அங்கு 2 தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.


Related Tags :
Next Story