முள்ளக்காட்டில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையை தாக்கி 2½ பவுன் நகை பறிப்பு


முள்ளக்காட்டில்  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையை தாக்கி   2½ பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:15:54+05:30)

முள்ளக்காட்டில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையை தாக்கி 2½ பவுன் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

முள்ளக்காடு:

முள்ளக்காட்டில் வீடுபுகுந்து ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை தாக்கி 2½ பவுன் நகைகளை பறித்துச் சென்ற வாலிபர் சிக்கினார். அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை

தூத்துக்குடி முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜம்மாள் (வயது81). ஓய்வு பெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை. இவரது மகன், மகள் ஆகியோர் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் ஜெய ராஜம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டு வேலைக்கு கவிதா என்ற பெண் வந்து ெசன்றுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு அந்த பெண் வீட்டிற்கு சென்று விட்டாராம். மீண்டும் நேற்று காலையில் அந்த பெண் வேலைக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து உள்ளே சென்றுள்ளார்.

நகைகள் பறிப்பு

வீட்டிற்குள் ஜெயராஜம்மாள் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து அவரது மகன் தங்கத்துரைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அங்கு சென்ற தங்கத்துரை காயத்துடன் கிடந்த ஜெயராஜம்மாளை மீட்டு, அவரிடம், என்ன நடந்தது? என்று கேட்டுள்ளனர். அப்போது, அவர் அந்த பகுதியை சேர்ந்த வசந்தகுமார்(25) என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி வந்ததாகவும், அவர் தன்னை கம்பியால் தாக்கி விட்டு, கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் 4 கிராம் கம்மல், செல்போனை திருடி சென்று விட்டதாகவும் கூறிவிட்டு மீண்டும் மயங்கிவிட்டார்.

வாலிபர் சிக்கினார்

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்கு பதிவு வசந்தகுமாரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து ஜெயராஜம்மாளின் மீட்கப்பட்டன.


Next Story