மூர்த்தீஸ்வரத்தில் ரூ.23.05 லட்சத்தில் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்


மூர்த்தீஸ்வரத்தில் ரூ.23.05 லட்சத்தில் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 5:24 PM IST)
t-max-icont-min-icon

மூர்த்தீஸ்வரத்தில் ரூ.23.05 லட்சத்தில் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி

கயத்தாறு:

புதிய சாலைகள்

கயத்தாறு யூனியன் திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்தில் மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் 2 கி.மீ. தொலைவுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.19.05 லட்சம் மதிப்பில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, சாலைப்பணியை தொடங்கி வைத்தார். பின்னர் வடகாசி அம்மன் கோவில் தெருக்களில் ரூ. 4லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், அ.தி.மு.க. ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகண்ணன், மாவட்ட எம். ஜி.ஆர்.மன்ற செயலாளர் பூமாரியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முடுக்குமீண்டான்பட்டி

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள முடுக்குமீண்டான்பட்டி எஸ்.டி.ஏ. தெருவில் உள்ள காளியம்மன் கோவில் முன்மண்டப கட்டிட வாஸ்து பூஜை விழா நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை 8 மணியளவில் கோவில் வளாகத்தில் முன்பண்டப கட்டிடம் கட்டுவதற்கான பூஜைகள் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மண்டப கட்டிடம் கட்ட முதல் செங்கல்லை எடுத்து வைத்து வாஸ்து பூஜையை தொடங்கி வைத்தார். விழாவில் கோவில் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story