முத்தையாபுரம் பகுதியில்புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4கடைகளுக்கு 'சீல்'


முத்தையாபுரம் பகுதியில்புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முத்தையாபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4கடைகளுக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

முத்தையாபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

அதிகாரிகள் சோதனை

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டியன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள்

தெற்கு மண்டல பகுதிகளான அத்திமரப்பட்டி ரோடு, முள்ளக்காடு, சூசை நகர் பகுதியிலுள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 4 கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடைகளுக்கு சீல் வைப்பு

அந்த கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த 4 கடைகளுக்கும் அவர்கள் 'சீல்' வைத்தனர்.

பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க அனைத்து கடைகளிலும் அடிக்கடி சோதனைகள் நடத்தப்படும்.

வியாபாரிகள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். இதை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைப்பதுடன், மேல் நடவடிக்கையும் எடுக்கப்படும், என தெரிவித்தனர்.


Next Story