முத்தையாபுரத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்


முத்தையாபுரத்தில்  மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
x

முத்தையாபுரத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமையில் வடக்கு முத்தையாபுரம் பிரிவு அலுவலகத்தில் வைத்து மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

அப்போது மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, சுந்தர்நகர், கிருஷ்ணாநகர், தங்கம்மாள்புரம், பாரதிநகர், சேசுநகர், குமாரசாமிநகர், பொன்னான்டி நகர் ஆகிய பகுதிகளின் மின் நுகர்வோர்களை வரவேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை கேட்டறிந்து, குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார்.

இதில், மாநகராட்சி கவுன்சிலர்கள், விவசாயம் மற்றும் வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், தூத்துக்குடி நகர செயற்பொறியாளர் ராம்குமார், உதவி செயற்பொறியாளர்கள் உமையொருபாகம், ஆறுமுகம், பெருமாள், சகாயமங்களராணி சுப்புலட்சுமி, இள மின் பொறியாளர்கள் ரமேஷ், சோமலிங்கம், கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story